Preparation Time: 25 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 4202 Likes :
Ingredients
வெள்ளரிக்காய் 3
கோழி கொத்துக்கறி 250 கிராம்
முட்டை 1
ஃபிஷ் ஸாஸ் 1 மேஜைக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் அரை தேக்கரண்டி
கொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி
கோழிக்கறி வேக வைத்த தண்ணீர் (சிக்கன் ஸ்டாக்) தேவையான அளவு
Preparation Method
வெள்ளரிக்காயை சதுர வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கொத்துக்கறியை வேக வைத்துக் கொள்ளவும்.
முட்டையை லேஸாக அடித்துக் கொள்ளவும்.
வேக வைத்துள்ள கொத்துக்கறியுடன் முட்டையை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் சிக்கன் ஸ்டாக் ஊற்றி, கொதித்ததும் கொத்துக்கறி — முட்டை கலவை, கொத்தமல்லி இலை, ஃபிஷ் ஸாஸ், இவற்றை சேர்த்து கிளறவும்.
5 நிமிடங்கள் கொதித்ததும், வெள்ளரிக்காய் துண்டுகள் போட்டுப் மேலும் 5 நிமிடங்கள் ஆனதும் இறக்கி, சூப் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி கொத்தமல்லி இலை, வெள்ளை மிளகுத்தூள் போட்டு பரிமாறவும்.
ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.