ஆந்திரா கோழிக்கறி குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4661
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகளுடன் உப்பு, எலுமிச்சைச்சாறு, மஞ்சள்தூள், 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் இவற்றைக் கலந்து 2 மணி நேரம் ஊற விடவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தனியாத்தூள், சோம்பு, மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் இவற்றைப் போட்டு வறுத்து எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய்த்துறுவல் மற்றும் கொத்தமல்லி இலையை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் ஊற வைத்துள்ள கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கியபின் மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி மூடி வைக்கவும்.
  • மேலும் 5 நிமிடங்கள் ஆனபின் கோழிக்கறி வேகுவதற்கு தேவையான தண்ணீர் ஊற்றவும்.
  • கோழிக்கறித் துண்டுகள் வெந்ததும் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டுக் கிளறவும்.
  • கிளறியபின் வறுத்து அரைத்த மஸாலா சேர்த்து நன்றாக கிளறி, தேங்காய் அரைத்த கலவை சேர்த்து அனைத்தும் நன்றாக கலந்ததும் உப்பு சரி பார்த்து கொள்ளவும்.
  • குழம்பு பதம் வந்ததும் இறக்கி, பரிமாறவும்.

Choose Your Favorite Hyderabad Recipes

  • ஹைதராபாத் ஸ்பெஷல் ஃபலூடா

    View Recipe
  • ஆந்திரா கோழி வெள்ளை புலவு

    View Recipe
  • கொத்துக்கறி—பட்டாணி (கீமா—மட்டர்)

    View Recipe
  • ஹைதராபாத் சிக்கன் 65

    View Recipe
  • ஆந்திரா கோழிக்கறி குழம்பு

    View Recipe
  • ஹைதராபாத் லோக்மி

    View Recipe
Engineered By ZITIMA