Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 45 நிமிடங்கள்
Hits : 5145 Likes :
Ingredients
கடலைப்பருப்பு 200 கிராம்
வெல்லம் (தூளாக்கியது) 350 கிராம்
பால் 750 மில்லி லிட்டர்
தேங்காய்ப்பால் 300 மில்லி லிட்டர்
அரிசி 3 மேஜைக்கரண்டி
முந்திரிப்பருப்பு 10
கிஸ்மிஸ் 5
ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி
நறுக்கிய தேங்காய் துண்டுகள் 3 மேஜைக்கரண்டி
நெய் 1 மேஜைக்கரண்டி
Preparation Method
குக்கரில் 4 கப் தண்ணீர் ஊற்றி, அரிசி மற்றும் கடலைப்பருப்பைப் போட்டு விசில் சப்தம் கேட்டதும் தீயை மிதமாக்கி 15 நிமிடங்கள் கழித்து இறக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் வெல்லத்தைப் போட்டு, கரைந்ததும் துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் வெல்லக் கரைசலை ஊற்றி, வேக வைத்துள்ள அரிசி — கடலைப்பருப்பு கலவை, 2 கப் பாலை ஊற்றவும்.
கொதித்து 5 நிமிடங்கள் ஆனதும் மீதமுள்ள பாலை ஊற்றி மேலும் 20 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்திருக்கவும்.
தேங்காய் துண்டுகள், தேங்காய்ப்பால், ஏலக்காய் பொடி, இவற்றை சேர்த்து, பாயஸம் ஓரளவு கெட்டியானதும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் முந்திரிப்பருப்பு மற்றும் கிஸ்மிஸ்ஸை போட்டுக் கிளறியபின் பரிமாறவும்.