Preparation Time: 15 நிமிடங்கள் Cooking Time: 15 நிமிடங்கள்
Hits : 13474 Likes :
Ingredients
மீன் 500 கிராம்
சின்ன வெங்காயம் 20
தக்காளி 2
பெரிய வெங்காயம் 1
இஞ்சி 3 அங்குலம்
பூண்டு 6 பல்
தேங்காய்த்துறுவல் 4 மேஜைக்கரண்டி
புளி 1 எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
சோம்பு 1 தேக்கரண்டி
சீரகம் 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி
Preparation Method
விருப்பப்பட்ட மீன் வகையை தயாராக வைத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும்.
பூண்டை உரித்து நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளி, சின்ன வெங்காயம், சோம்பு, சீரகம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், 2 மேஜைக்கரண்டி தேங்காய்த்துறுவல் இவற்றை அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள தேங்காய்துறுவலில் பால் எடுத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்து, கரைத்துக் கொள்ளவும்.
இஞ்சியை தீக்குச்சி போல நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி, பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை, இவற்றைப் போட்டு வதக்கவும்.
வதங்கியபின் அரைத்து வைத்துள்ள மஸாலாவைப் போட்டு வதக்கவும்
அதன்பின் தேவையான அளவு சுடு தண்ணீர் ஊற்றி, உப்பு போடவும்.
புளிக்கரைசல் மற்றும் தேங்காய்ப்பால் ஊற்றி, குழம்பு கெட்டியானதும் மீன் துண்டுகளைப் போட்டு மீன் துண்டுகள் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.