Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 10 நிமிடங்கள்
Hits : 2962 Likes :
Ingredients
பால் 4 கப்
பாதாம்பிஸின் 1 தேக்கரண்டி
நன்னாரி சர்பத் 3 மேஜைக்கரண்டி
ரோஸ் ஸிரப் (Rose Syrup) 4 தேக்கரண்டி
சைனா க்ராஸ் (China Grass) அரை தேக்கரண்டி
சர்க்கரை (Sugar) 3 மேசைக்கரண்டி
வெனிலா ஐஸ்க்ரீம் தேவையான அளவு
Preparation Method
பாலுடன் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்.
பாதாம் பிஸினை 2 மடங்கு தண்ணீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற விடவும்.
பால் பாதி அளவு குறையும் வரை வற்றக் காய்ச்சி இறக்கி வைக்கவும்.
பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும்.
சைனா க்ராஸை 2 கப் தண்ணீரில் கலந்து 10 நிமிடங்கள் ஊற விடவும்.
சைனா க்ராஸ் கரையும் வரை மிதமான தீயில் வைத்து கரைந்ததும் வேறு கிண்ணத்திற்கு மாற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
குளிர்ந்ததும் வெளியே எடுத்து முள்கரண்டியின் (Fork) உதவியால் சீவல்களாக செய்து கொள்ளவும்.
உயரமான கண்ணாடி கப்களில் நன்னாரி சர்பத், சிறிதளவு பாதாம் பிஸின், சைனா க்ராஸ் (China Grass) சீவல்கள், ரோஸ் ஸிரப், 2 மேஜைக்கரண்டி பால், பாலின் மீது வெனிலா ஐஸ்க்ரீம் வைத்து பரிமாறவும்.