Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: சுமார் 40 நிமிடங்கள்
Hits : 4574 Likes :
Ingredients
மைதாமாவு 1 கப்
பேக்கிங் பவுடர் (Baking Powder) அரை தேக்கரண்டி
வெண்ணெய் 100 கிராம்
முட்டை 2
வெனிலா எஸென்ஸ் அரை தேக்கரண்டி
சர்க்கரை (Sugar) 100 கிராம்
நறுக்கிய அக்ரூட் 2 மேஜைக்கரண்டி
வெள்ளை நிற சாக்லேட் சிப்ஸ் ஒன்றரை மேஜைக்கரண்டி
ப்ரெளன் நிற சாக்லேட் சிப்ஸ் ஒன்றரை மேஜைக்கரண்டி
Preparation Method
வெண்ணெய்யை மைக்ரோ வேவ் பாத்திரத்தில் போட்டு High—ல் 2 நிமிடங்கள் வைத்து லேஸாக உருக்கிக் கொள்ளவும்.
முட்டைகளை வெள்ளைக்கரு, மஞ்சள்கருவை பிரித்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
இதை வெண்ணெய் போட்டு நீள பாத்திரத்தில் ஊற்றி, எஸென்ஸ், சர்க்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும்.
அதன்பின் மைதாமாவை சேர்த்து, ஒரு பக்கமாக சுழற்றினாற் போல கலந்து விடவும்.
இந்தக் கலவையுடன் அக்ரூட், சேர்க்கவும்.
இதன் மீது 2 வகை சாக்லேட் சிப்ஸை தூவவும்.
முன்கூட்டியே சூடேற்றப்பட்ட கன்வெக்ஷன்—ல் (Microwave Oven) வைத்து, 30 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை வேக விட்டு அதன்பின் எடுத்து ஓரளவு ஆறியதும் எடுத்து பரிமாறவும்.