ப்ளெயின் கேக்

Spread The Taste
Serves
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: சுமார் 30 to 40 நிமிடங்கள் அவன்—ஐ (Oven) 180° F—ல்
Hits   : 7076
Likes :

Preparation Method

  • மைதாமாவுடன் பேக்கிங்பவுடர் கலந்து சலித்து வைத்துக் கொள்ளவும்.
  • முட்டையில் வெள்ளைக்கரு தனியாகவும், மஞ்சள் கரு தனியாகவும் பிரித்துக் கொள்ளவும்.
  • Electric Blender—னால் இரண்டையும் நன்றாக அடித்து வைக்கவும்.
  • சர்க்கரையை தூளாக்கிக் கொள்ளவும்.
  • சர்க்கரையை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு, மஞ்சள் கருவை போட்டு நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  • அதன்பின் வெண்ணெய்யை போட்டு குழிக்கரண்டி அல்லது மத்தினால் நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
  • அதன்பின் மைதாமாவு கலவையை சேர்த்து நன்றாக கலந்து, வெனிலா எஸென்ஸ், உப்புத்தூள், எலுமிச்சைச்சாறு சேர்த்து கலக்கி, வெள்ளைக்கருவை சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
  • கேக் பாத்திரத்தில் சிறிதளவு வெண்ணெய் தடவியபின் இதன் மீது மைதா மாவை பரவலாக தூவி, கேக் பாத்திரத்தை சுழற்றவும்.
  • இதனால் மைதாமாவு பரவலாக பாத்திரத்தில் படும்.
  • அதன்பின் தயாரித்து வைத்துள்ள மாவை கேக் பாத்திரத்தில் முக்கால் பாகம் ஊற்றவும்.
  • கேக் பாத்திரத்தை தட்டி வைக்கவும்.
  • இதனால் கேக் மாவு சமமாக பரவி இருக்கும்.
  • ஏற்கெனவே சூடேற்றப்பட்ட அவன்—ல் கேக் பாத்திரத்தை வைத்து, சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் ஆனபின் கேக் வெந்தது பார்த்து (கத்தியினால் குத்தி பார்க்கவும்) எடுத்து, ஓரளவு ஆறியதம் துண்டுகளாக வெட்டி, பரிமாறவும்.
Engineered By ZITIMA