ரிச் ஃப்ரூட் கேக்

Spread The Taste
Serves
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 1 மணிநேரம் அவன்—ஐ (Oven) 350° F—ல் உஷ்ணத்தில் முன
Hits   : 6729
Likes :

Preparation Method

  • மைதாமாவுடன் சமையல் ஸோடாவை கலந்து சலித்துக் கொள்ளவும்.
  • உலர்ந்த பழங்களை நறுக்கிக் கொள்ளவும்.
  • மைதாமாவுடன் நறுக்கிய உலர்ந்த பழங்களை சேர்த்துக் கொள்ளவும்.
  • வெனிலா எஸென்ஸையும் கலந்து கொள்ளவும்.
  • வெண்ணெய்யையும், சர்க்கரையையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
  • முட்டைகளை வெள்ளைக்கரு தனியாகவும், மஞ்சள்கரு தனியாகவும் பிரித்துக் கொள்ளவும்.
  • தனித்தனியாக Electric Blender—ல் முட்டைகளை அடித்துக் கொள்ளவும்.
  • வெண்ணெய்—சர்க்கரை கலவையுடன் முட்டை அடித்து வைத்துள்ளதை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, அடித்துக் கலக்கவும்.
  • வெனிலா எஸென்ஸ், கேரமல் சர்க்கரை இவற்றை சேர்த்து கிளறவும்.
  • உலர்ந்த பழங்கள் கலந்த மைதாமாவுடன் சேர்த்து கலந்து கொண்டே எலுமிச்சைச்சாற்றையும், பாலையும் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
  • கிளறியபின் கிராம்பு, ஜாதிக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.
  • கேக் வேக வைக்கும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, அதன்பின் மைதாமாவு தூவிக் கொள்ளவும்.
  • கேக் மாவுக்கலவையை ஊற்றி, மாவு சீராக பரவுவதற்காக பாத்திரத்தை லேஸாக தட்டிக் கொள்ளவும்.
  • அவன்—ல் கேக் பாத்திரத்தை வைத்து 1 மணி நேரம் ஆனபின் எடுத்து வெந்தது பார்த்து எடுத்து ஓரளவு ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.
Engineered By ZITIMA