மார்பிள் கேக்

Spread The Taste
Serves
Preparation Time: 25 நிமிடங்கள்
Cooking Time: சுமார் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் — 20 நிமிடங்கள் அ
Hits   : 8250
Likes :

Preparation Method

  • மைதாமாவுடன், பேக்கிங்பவுடரை கலந்து சலித்துக் கொள்ளவும்.
  • வெண்ணெய், சர்க்கரையையும் கலந்து Electrical Blender — பயன்படுத்தி நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
  • அதன்பின் வெண்ணெய்—சர்க்கரை கலவையுடன் முட்டைகளை ஒவ்வொன்றாக ஊற்றி கலந்து, அடித்துக் கொள்ளவும்.
  • இக்கலவையுடன் மைதாமாவு, பால் இரண்டையும் மாற்றி மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கிளறிக் கொண்டே ஊற்றவும்.
  • இக்கலவையுடன் வெனிலா எஸென்ஸ் சேர்த்து, கலந்து பாதி அளவு கலவையை தனியே எடுத்து வைக்கவும்.
  • கொக்கோ பவுடரையும், சமையல் சோடாவையும் 3 மேஜைக்கரண்டி சூடான தண்ணீரில் கலந்து கொள்ளவும்.
  • பாதி அளவு எடுத்து வைத்துள்ள மைதாமாவு கலவையுடன் கொக்கோ பவுடர் கலவையை ஊற்றி கலந்து கொள்ளவும்.
  • பாதாம் எஸென்ஸையும் கலந்து கொள்ளவும்.
  • கேக் வேக வைக்கும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி இதன் மீது மைதாமாவு தூவி, அதன்பின் மீதமுள்ள வெள்ளை நிற மாவையும், கொக்கோ பவுடர் கலந்த மாவையும் மாற்றி, மாற்றி ஊற்றிக் கொள்ளவும்.
  • கேக் மாவு சமமாக பரவுவதற்காக பாத்திரத்தை லேஸாக தட்டவும்.
  • முன் கூட்டியே சூடேற்றப்பட்ட அவன்—ல் (Oven) கேக் பாத்திரத்தை வைத்து, 1 மணி நேரம், 15 நிமிடங்கள் வைத்து அதன்பின் வெந்தது பார்த்து எடுத்து ஓரளவு ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
Engineered By ZITIMA