Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 1 மணிநேரம் அவன்—ஐ (Oven) 350° F—ல் முன் கூட்டியே
Hits : 9807 Likes :
Ingredients
மைதாமாவு 180 கிராம்
சர்க்கரை (Sugar) 240 கிராம்
பேக்கிங் பவுடர் (Baking Powder) 2 தேக்கரண்டி
முட்டை 4
வெண்ணெய் 240 கிராம்
தேங்காய்த்துறுவல் 80 கிராம்
Preparation Method
மைதாமாவுடன் பேக்கிங்பவுடர் கலந்து சலித்துக் கொள்ளவும்.
வெண்ணெயையும், சர்க்கரையையும் நன்றாக அடித்து, கலக்கிக் கொள்ளவும்.
முட்டைகளை வெள்ளைக்கரு தனியாகவும், மஞ்சள்கருவை தனியாகவும் பிரித்து Electrical Blender — பயன்படுத்தி அடித்துக் கொள்ளவும்.
அதன்பின் தேங்காய்த்துறுவல், இரண்டு தேக்கரண்டி தண்ணீர், மைதாமாவு இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக முட்டைக் கலவையுடன் சேர்த்து, மெதுவாக கிளறவும்.
இந்த கலவையை கேக் வேக வைக்கும் 2 பாத்திரங்களில் வெண்ணெய் தடவி, மைதாமாவு தூவி, மைதா பரவுவதற்காக பாத்திரங்களை லேஸாக தட்டவும்.
மாவை ஊற்றிய பின் மாவு சமமாக பரவுவதற்காக லேஸாக தட்டியபின் முன் கூட்டியே சூடேற்றப்பட்ட அவன்—ல் (Oven) வைக்கவும்.
1 மணிநேரம் ஆனபின் வெந்தது பார்த்து, எடுத்து ஓரளவு ஆறியதும் ஒரு கேக் மீது தேங்காய் க்ரீம் தடவி, மற்றொரு கேக்கை வைத்து, கேக்கின் பக்கங்களிலும், மேல் பகுதியிலும் தேங்காய் க்ரீம் தடவி, துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
தேங்காய் க்ரீம் தயாரிக்கும் செய்முறை:
200 கிராம் வெண்ணெய்யுடன், 400 கிராம் தூளாக்கிய சர்க்கரை மற்றும் சிறிதளவு உலர்ந்த தேங்காய்த்துறுவல் சேர்த்துக் கலக்கவும். இது தேங்காய் க்ரீம் எனப்படும்.