Preparation Time: 45 நிமிடங்கள் Cooking Time: 40 நிமிடங்கள்
Hits : 4573 Likes :
Ingredients
பச்சரிசி 500 கிராம்
தேங்காய் 1 மூடி
சர்க்கரை (Sugar) தேவையான அளவு
உப்புத்தூள் 2 சிட்டிகை
Preparation Method
அரிசியை ஊற வைத்து, உலர்த்தியபின் மாவாக்கிக் கொள்ளவும்.
தேங்காயை துறுவிக் கொள்ளவும்.
தேங்காய்துறுவலுடன் தேவையான அளவு சர்க்கரை கலந்து கொள்ளவும்.
அரிசி மாவுடன் உப்புத்தூள், சுடு தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.
மாவில் இருந்து சிறிதளவு எடுத்து மெல்லிய வட்டமாக தட்டி, நடுவில் தேங்காய்த்துறுவல் — சர்க்கரை கலவையில் சிறிதளவு வைத்து, அரை வட்டமாக மடித்து ஓரங்களை பொருத்திக் கொள்ளவும்.
இதுபோல் எல்லா மாவிலும் கொழுக்கட்டைகள் செய்து வைத்துக் கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
இட்லி தட்டுகளில் கொழுக்கட்டைகளில் சிலவற்றை வைத்து வேக வைக்கவும்.
எல்லா கொழுக்கட்டைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக வேக வைத்து, எடுத்து பரிமாறவும்.