மட்டன் முந்திரி மஸாலா குருமா

Spread The Taste
Serves
8 நபர்களுக்கு
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 5235
Likes :

Preparation Method

  • ஆட்டுக்கறித் துண்டுகளுடன் 1 தேக்கரண்டி இஞ்சிபூண்டு அரைத்தது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • சிறிதளவு தண்ணீரை கொதிக்க வைத்து, வெங்காயம், பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு இவற்றைப் போட்டு 5 நிமிடங்கள் கொதித்தபின் இறக்கி ஆறியதும் கசகசா சேர்த்து வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள இஞ்சிபூண்டு அரைத்தது போட்டு வதக்கி, தனியாத்தூள், சீரகத்தூள் போட்டு 1 நிமிடம் வதக்கவும்.
  • அதன்பின் அரைத்த மஸாலா போட்டு நன்றாக வதக்கவும்.
  • வதக்கியபின் கொத்தமல்லி, புதினா இலை சேர்த்து கிளறவும்.
  • உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
  • அனைத்தும் நன்றாக வதங்கியதும் வேக வைத்துள்ள ஆட்டுக்கறியைப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • இப்போது ஃப்ரெஷ்க்ரீம் சேர்த்து அதிகமாக கொதிக்க விடாமல் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA