மட்டன்—காளான் வறுவல்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 40 நிமிடங்கள்
Hits   : 6997
Likes :

Preparation Method

 

 • ஆட்டுக்கறித் துண்டுகளை சுத்தம் செய்து உப்புத்தூள், கார்ன்ஃப்ளோர், வினிகர், மஞ்சள்தூள் இவற்றுடன் கலந்து 30 நிமிடங்கள் ஊற விடவும்.
 • கலர் குடமிளகாயின் விதைகளை நீக்கிவிட்டு நீளமான மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 • வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.
 • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
 • காளானை சுத்தம் செய்து 2 பாகங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
 • இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஊற வைத்துள்ள கறித் துண்டுகளைப் பொரித்து (Deep Fry) எடுத்து வைக்கவும்.
 • வேறொரு வாணலியில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் காளான் துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கி, இறக்கி வைக்கவும்.
 • இன்னொரு வாணலியில் 3 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இவற்றை லேஸாக வதக்கவும்.
 • கலர் குடமிளகாய் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
 • உப்புத்தூள், வெள்ளை மிளகுத்தூள் போடவும்.
 • ஸோயா ஸாஸ், தக்காளி ஸாஸ் சேர்த்துக் கிளறவும்.
 • பொரித்து வைத்துள்ள கறித்துண்டுகளைப் போட்டு கிளறவும்.
 • மிகச் சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்.
 • வதக்கி வைத்துள்ள காளான் துண்டுகளைப் போட்டுக் கிளறி, இறக்கி, வெங்காயத்தாள் நறுக்கி, தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
Engineered By ZITIMA