மட்டன்—வெங்காய மஸாலா குழம்பு

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4489
Likes :

Preparation Method

  • ஆட்டுக்கறித் துண்டுகளுடன் தயிர் மற்றும் உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் ஊற விடவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை வேக வைத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி ப்யூரி தயாரித்துக் கொள்ளவும்.
  • தனியாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், ஜாதிக்காய் பொடி இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கியபின், வெங்காயம் போட்டு சிவக்க வதக்கி, ஆறியதும் அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலி அல்லது பாத்திரத்தில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் அரைத்தது போட்டு வதக்கவும்.
  • அதன்பின் அரைத்த மஸாலா போட்டு பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.
  • வதங்கியதும் தக்காளி ப்யூரி சேர்த்து கிளறவும்.
  • ஆட்டுக்கறித் துண்டுகள் போட்டுக் கிளறி விடவும்.
  • தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்.
  • ஆட்டுக்கறி வெந்து, குழம்பு கெட்டியானதும் கரம்மஸாலாத்தூள், கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA