Preparation Time: 15 நிமிடங்கள் Cooking Time: 30 நிமிடங்கள்
Hits : 14566 Likes :
Ingredients
ரெடிமேட் பரோட்டா (ready to cook) 2
பெரிய வெங்காயம் 1
பூண்டு 3 பல்
இஞ்சி 1 அங்குலம்
பச்சை மிளகாய் 3
குடமிளகாய் 1
கொத்தமல்லி இலை 3 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
சாம்பார் பொடி 3 சிட்டிகை
கரம்மஸாலாத்தூள் 3 சிட்டிகை
சில்லி ஸாஸ் (Chilli Sauce) 1 மேஜைக்கரண்டி
வெங்காயத்தாள் 2 மேஜைக்கரண்டி
கேரட் (சிறியது) 1
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி
Preparation Method
தோசைக்கல்லைக் காய வைத்து 1 மேஜைக்ககரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பரோட்டாவைப் போட்டு இரண்டு பக்கமும் பொன் நிறமாக வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
ஆறியதும் சிறு சிறு சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
குடமிளகாயின் விதைகளை நீக்கி விட்டு நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
பூண்டை, தோலுடன் ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
இஞ்சியை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அகன்ற வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பூண்டு போட்டு பொன் நிறமாக வதக்கவும்.
அதன்பின் இஞ்சி போட்டு வதக்கவும்.
வெங்காயம் போட்டு நன்றாக வதங்கியதும், குடமிளகாய் துண்டுகள் போட்டு வதக்கவும்.
மிளகாய்த்தூள், கரம் மஸாலாத்தூள், சாம்பார் பொடி இவற்றைப் போட்டுக் கிளறி, சில்லி ஸாஸ் மற்றும் உப்பு சேர்க்கவும்.
மிதமான தீயில் வைத்து, அனைத்தும் நன்றாக கலந்து வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள பரோட்டா துண்டுகளைப் போட்டு வதக்கிய பொருட்களும், பரோட்டா துண்டுகளும் நன்றாக வதங்கும் வரை கிளறி விடவும்.
தீயைக் கூட்டி வைத்து கொத்தமல்லி இலை, நறுக்கிய கேரட், வெங்காயத்தாள் இவற்றை போட்டுக் கிளறியவுடன் இறக்கி பரிமாறவும்.