கொத்து பரோட்டா

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 7041
Likes :

Preparation Method

செய்முறை:

 • பரோட்டாக்களை சமையலறை கத்தரிக்கோலால் (Kitchen Scissors), சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் அல்லது கையினால் பிய்த்துப் போட்டுக் கொள்ளவும்.
 • பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • பச்சை மிளகாயின் நடுவில் கீறிக் கொள்ளவும்.

சால்னா தயாரிப்பதற்கு:

 • கோழிக்கறி அல்லது ஆட்டுக்கறியை தயாராக வைத்துக் கொள்ளவும்.
 • தனியாத்தூள், சீரகத்தூள், தேங்காய்த்துறுவல், சின்ன வெங்காயம், மிளகுத்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
 • பாத்திரத்தில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த மஸாலாவைப் போட்டு, மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
 • அதன்பின் கோழிக்கறி/ஆட்டுக்கறி துண்டுகளைப் போட்டு 5 நிமிடங்கள் வதக்கவும்.
 • வதங்கியபின் தேவையான அளவு தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும்.
 • கறி வெந்தபின் குழம்பு பதம் வந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
 • அகன்ற வாணலியில், மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
 • நறுக்கி வைத்துள்ள பரோட்டா துண்டுகளைப் போட்டு, கிளறவும்.
 • 5 நிமிடங்கள் ஆனதும் சால்னாவில் இருந்து சிறிதளவு கரண்டியில் எடுத்து வதங்கிக் கொண்டிருக்கும் பரோட்டா துண்டுகள் மீது ஊற்றி, கிளறவும்.
 • அதன்பின் அந்தக் கலவையின் நடுவே ஒரு பள்ளம் செய்து, அதில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்றாக கிளறவும்.
 • அனைத்தும் கலந்து நன்றாக வதங்கும் வரை நிறுத்தாமல் கிளறவும்.
 • பரோட்டா கலவை முழுவதும் நன்றாக வதங்கியதும், இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA