வெஜிடபிள் கொத்து பரோட்டா

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 6404
Likes :

Preparation Method

செய்முறை:

  • பரோட்டாக்களை சமையலறை கத்தரிக்கோலால் (Kitchen Scissors), சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் அல்லது கையினால் பிய்த்துப் போட்டுக் கொள்ளவும்.

காய்கறி மஸாலா தயாரிப்பதற்கு:

  • கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ் இவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • அதன்பின் காய்கறிகள், பட்டாணி போட்டு வதக்கி, சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்.
  • தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கிளறவும்.
  • காய்கறிகள் வெந்து, தண்ணீர் ஊற்றி கெட்டியானதும், மீதமுள்ள எண்ணெய் ஊற்றி பரோட்டா துண்டுகளைப் போடவும்.
  • பரோட்டா துண்டுகளும், காய்கறி மஸாலாவும் நன்றாக கலந்து வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA