உருளைக்கிழங்கு பனீர் பரோட்டா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 7019
Likes :

Preparation Method


  • கோதுமை மாவுடன் உப்புத்தூள், 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய், தேவையான அளவு சுடு தண்ணீர் ஊற்றிப் பிசைந்து மூடி வைக்கவும்.
  • உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, உப்புத்தூள் சேர்த்துப் பிசைந்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
  • தனியாத்தூள், சாட் மஸாலாத்தூள் போடவும்.
  • பனீர் துறுவல் சேர்த்துக் கிளறவும்.
  • கொத்தமல்லி இலை போட்டு ஒரு முறை கிளறியதும் இறக்கி வைக்கவும்.
  • பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவில் சிறிதளவு எடுத்து, வட்டகளாகத் தேய்த்துக் கொள்ளவும்.
  • ஒரு வட்டத்தின் நடுவே உருளைக்கிழங்கு — பனீர் கலவையை வைத்து போளிக்கு மடக்குவது போல மடக்கி, அதன்பின் கையால் தட்டிக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கு, பனீர் கலவை வெளியே வந்து விடாமல் கவனமாக செய்ய வேண்டும்.
  • தோசைக்கல் அல்லது Non—Stick—Dosapan—ஐ காய வைத்து, செய்து வைத்த பரோட்டாவைப் போட்டு சுற்றிலும் சிறிதளவு நெய் ஊற்றவும்.
  • மிதமான தீயில் வைத்து நன்றாக வெந்து, சிவந்ததும் எடுக்கவும்.
  • இது போல் எல்லா மாவிலும் பரோட்டாக்கள் செய்து, சிவக்க வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA