ஸ்டஃப்ட் பரோட்டா

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 8399
Likes :

Preparation Method

  • ஒரு பாத்திரத்தில் மைதாமாவு, உப்புத்தூள், 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, மாவு மிருதுவாகும் வரை (10 நிமிடங்கள் வரை) பிசைந்து கொள்ளவும்.
  • மாவை துணியால் மூடி 30 நிமிடங்கள் ஊற விடவும். முட்டையை நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், சோம்பு, கிராம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு இவற்றை இளம்பொன் நிறமாக வதக்கவும்.
  • அதன்பின் தக்காளி, கோழி கொத்துக்கறி, மஞ்சள் பொடி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம்மஸாலாத்தூள் இவற்றைப் போட்டு, கொத்துக்கறி வேகும் வரை வதக்கவும்.
  • இந்தக் கொத்துக்கறிக்கலவை சிவக்கும் வரை தொடர்ந்து வதக்கவும்.
  • வதக்கியதும் முட்டைக் கலவையை ஊற்றி, கொத்துக்கறியுடன் நன்றாகக் கலக்கி வதக்கவும்.
  • கொத்தமல்லி இலை போட்டுக் கிளறி இறக்கி ஆற விடவும்.
  • மைதா மாவை 8 பாகங்களாகப் பிரித்து மூடி வைக்கவும்.
  • ஒரு பாக மாவை எடுத்து மைதா மாவு தூவி, சதுர வடிவமாகத் தேய்த்துக் கொள்ளவும்.
  • இதன் நடுவே தயாரித்து வைத்துள்ள கொத்துக்கறி மஸாலாவில் சிறிதளவு வைத்து இரண்டு விளிம்புகளையும் மடித்து, மறுபடியும் சிறிதளவு மைதாமாவு தூவி மறுபடி சதுர வடிவமாகத் தேய்க்கவும்.
  • தோசைக்கல்லைக் காய வைத்து பரோட்டாவைப் போட்டு, சுற்றிலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • மெதுவாக திருப்பிப் போட்டு இரண்டு பக்கமும் பொன் நிறமாக சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA