சிக்கன் தோப்யாசா

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 5065
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகளுடன் உப்புத்தூள், எலுமிச்சைச்சாறு சேர்த்து, புரட்டி மூடி ஃப்ரிட்ஜி—ல் (Fridge) 20 நிமிடங்கள் வைக்கவும்.
  • வெங்காயம், இஞ்சி, பூண்டு, இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தக்காளி, பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை போட்டு வதக்கி, இறக்கி அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த கலவையை தயிருடன் கலந்து கொள்ளவும்.
  • வேறு வாணலியில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, மிளகு இவற்றைப் போட்டு வதக்கி, தயிர்க்கலவையை சேர்த்து கிளறவும்.
  • அதன்பின் மஞ்சள்தூள், தனியாத்தூள், சர்க்கரை இவற்றைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
  • வதக்கியபின் ஊற வைத்துள்ள கோழிக்கறியைப் போட்டு வதக்கி, சிறிதளவு சுடு தண்ணீர் ஊற்றவும்.
  • அனைத்தும் கலந்து நன்றாக வதங்கும் வரை மிதமான தீயில் வைக்கவும்.
  • இன்னொரு சிறிய வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், போட்டு வதக்கி கரம் மஸாலாத்தூள் சேர்த்து சிவக்க வதக்கி, இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வதங்கிக் கொண்டிருக்கும் கோழிக்கறியுடன் சின்ன வெங்காய கலவை, கொத்தமல்லி இலை போட்டுக் கிளறி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA