சிக்கன் ஆனியன் மஸாலா

Spread The Taste
Serves
8 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 7256
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகளுடன், தயிர், உப்பு சேர்த்து குழையாமல் அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு ப்ரவுன் கலர் வரும் வரை வதக்கி, இறக்கி ஆறியதும் அரைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை ஒன்றிரண்டாக தட்டி வைத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் மீதமுள்ள இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி—பூண்டு போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், சீரகத்தூள், தனியாத்துள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், வறுத்த சோம்புத்தூள் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
  • அரைத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்கவும்.
  • அதன்பின் அரை வேக்காடாக வேக வைத்துள்ள கோழிக்கறித் துண்டுகளை வேக வைத்த தண்ணீரோடு ஊற்றி, கொதிக்க விடவும்.
  • உப்பு சரி பார்த்து, தேவைப்பட்டால் போட்டுக் கொள்ளவும்.
  • கோழிக்கறித் துண்டுகள் முழுமையாக கலந்து, மஸாலா பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும். (குழம்பாக வேண்டுமானால் அதிக கெட்டியாகாமல் இறக்கிக் கொள்ளவும்.)
Engineered By ZITIMA