கோழி வறுவல்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 17026
Likes :

Preparation Method

  • கோழிக்கறித் துண்டுகள் பெரியதாக இருக்க வேண்டும்.
  • கோழிக்கறித் துண்டுகளுடன் தயிர், உப்பு சேர்த்து 20 நிமிடங்கள் ஊற விடவும்.
  • வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • அகன்ற வாணலியில் நெய் மற்றும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அரைத்த மஸாலாவை போட்டு, மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.
  • பச்சை வாசனை நீங்கும் வரை மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
  • ஊற வைத்துள்ள கோழிகறித்துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
  • சிறிதளவு தண்ணீர் ஊற்றவும். கோழிக்கறி வெந்து, மஸாலா முழுவதும் கோழிக்கறித் துண்டுகள் மீது படிந்து சிவக்க வதங்கியதும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA