அடை

Spread The Taste
Serves
8 நபர்களுக்கு
Preparation Time: 40 நிமிடங்கள்
Cooking Time: 1 அடைக்கு 5 to 7 நிமிடங்கள்
Hits   : 3490
Likes :

Preparation Method

  • அரிசி, பருப்பு வகைகளை ஊற வைத்து, ஊறிய பிறகு மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு இவற்றுடன் ஆட்டிக் கொள்ளவும்.
  • தேங்காயை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கறிவேப்பிலையை நறுக்கிக் கொள்ளவும்.
  • ஆட்டிய மாவுடன், கறிவேப்பிலை, தேங்காய் துண்டுகள் இவற்றைப் போட்டுக் கலக்கிக் கொள்ளவும்.
  • தோசைக் கல்லை காய வைத்து, மாவை கரண்டியில் சிறிதளவு எடுத்து நடுவில் வைத்து, சற்று பருமனாக, வட்ட வடிவமாக பரப்பி, நடுவில் ஓட்டை போட்டு இதனுள் சிறிதளவு நெய் ஊற்றவும்.
  • சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • இரண்டு பக்கமும் நன்றாக வெந்து, சிவந்ததும் எடுக்கவும்.
  • ஆட்டி வைத்துள்ள எல்லா மாவிலும் இது போல அடை சுட்டு பரிமாறவும்.
Engineered By ZITIMA