தயிர் தோசை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 2 மணிநேரம் 2நிமிடங்கள்
Cooking Time: 5 நிமிடங்கள் 1 தோசைக்கு
Hits   : 2670
Likes :

Preparation Method

  • அரிசியையும், உளுந்தையும் தனித்தனியாக ஊற வைத்து, அவற்றில் அரிசியை சற்று கரகரப்பாகவும், உளுந்தை வழுவழுப்பாகவும் ஆட்டி, அதன்பின் ஒன்றாக கலந்து, உப்பு சேர்த்து ஆட்டிக் கொள்ளவும்.
  • காலையில் தயிருடன் உப்பு கலந்து கொள்ளவும்.
  • பச்சை மிளகாயை அரைத்து, தயிருடன் கலந்து கொள்ளவும்.
  • சிறிய வாணலியில் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, தயிருடன் சேர்த்து, நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து, காய்ந்ததும் சின்ன சின்ன தோசைகளாக ஊற்றவும். (ஒரு தடவைக்கு 4 அல்லது 5) ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு வெந்ததும் தோசைகளை தயிரில் போட்டு லேஸாக கிளறி விடவும்.
  • இதுபோல எல்லா மாவிலும் தோசைகள் செய்து தயிரில் போட்டு ஊற வைத்து, அதன்பின் பரிமாறவும்.
  • சின்ன தோசைகள் தயாரிப்பதற்கென்று பிரத்யேகமாக 5 அல்லது 6 குழிகள் உள்ள தோசைக்கல் விற்பனைக்கு உள்ளது.
Engineered By ZITIMA