குடமிளகாய் தோசை

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்
Hits   : 3228
Likes :

Preparation Method

  • தோசைமாவு    தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • குடமிளகாயின் விதைகளை நீக்கி விட்டு, முக்கோண வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  • அதன்பின் குடமிளகாய் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
  • வதங்கியதும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு போட்டு கிளறவும்.
  • தண்ணீர் இன்றி, கெட்டியானதும் கொத்தமல்லி இலை போட்டு, கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லை காய வைத்து, தோசைமாவில் சிறிதளவு கரண்டியில் எடுத்து நடுவில் இருந்து, விளிம்பு வரை, முறுகலாக வரும்படி பரவலாக ஊற்றவும்.
  • சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • குடமிளகாய் மஸாலா கலவையிலிருந்து சிறிதளவு எடுத்து, தோசை முழுவதும் வைத்து பரப்பி விடவும்.
  • தோசை, முறுகலாக சிவந்ததும் அரை வட்டமாக மடித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA