Preparation Time: 40 நிமிடங்கள் Cooking Time: 1 தோசைக்கு 7 நிமிடங்கள்
Hits : 13550 Likes :
Ingredients
புழுங்கல் அரிசி 500 கிராம்
உளுந்து 100 கிராம்
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் தேவையான அளவு
Preparation Method
புழுங்கல் அரிசியை தனியாகவும், உளுந்தை தனியாகவும் ஊற வைத்துக் கொள்ளவும்.
2 மணி நேரம் கழித்து புழுங்கல் அரிசியை ஆட்டிக் கொள்ளவும்.
(இட்லிக்கு ஆட்டுவது போல கரகரப்பாக ஆட்டத் தேவை இல்லை.)
உளுந்தை வழுவழுப்பாக ஆட்டி, அரிசிமாவு, உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.
மறுநாள் காலையில் தோசைக்கல்லைக் காய வைத்து கரண்டியில் மாவை எடுத்து பரவலாக ஊற்றி, சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
திருப்பிப் போட்டு சிவந்ததும் தோசையை மடித்து, எடுத்து பரிமாறவும்.
பரவலாக ஊற்றாமல் சிறிய தோசையாக கற்று தடிமனாக ஊற்றி, சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, மறுபக்கம் திருப்பிப் போட்டு லேஸாக சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.