Preparation Time: 30 நிமிடங்கள் Cooking Time: 5 நிமிடங்கள்
Hits : 8201 Likes :
Ingredients
உலர்ந்த பட்டாணி 500 கிராம்
தேங்காய் 1 மூடி
மாங்காய் 1
பச்சை மிளகாய் 3
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
மிளகாய்த்தூள் அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் 1
கடுகு 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
Preparation Method
பட்டாணியை இரவில் ஊற வைத்து, காலையில் குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
தேங்காயை மிகவும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மாங்காயை மிகவும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, பட்டாணியைப போட்டு மிளகாய்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
1 நிமிடம் மிதமான தீயில் வைத்து, அதன்பின் இறக்கி வைக்கவும்.
தேங்காய் துண்டுகள், மாங்காய் இவற்றைக் போட்டு நன்றாகக் கலக்கியபின் பரிமாறவும்.