உருளைக்கிழங்கு போண்டா

Spread The Taste
Makes
20 போண்டாக்கள்
Preparation Time: 30 நிமிடங்கள்
Cooking Time:
Hits   : 8221
Likes :

Preparation Method

 

  • அரிசி மற்றும் உளுந்தை தனித்தனியாக ஊற வைத்து, கெட்டியாக ஆட்டி உப்பு, சமையல் சோடா, மிளகாய்த்தூள் இவற்றைப் போட்டு ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி உப்புத்தூள் சேர்த்து, பிசைந்து கொள்ளவும்.
  • வெங்காயம், பச்சை  மிளகாய், கறிவேப்பிலை இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை போட்டு வதக்கி, பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் சேர்த்து, நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகள் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருளைக்கிழங்கு உருண்டை ஒவ்வொன்றையும் ஆட்டி வைத்துள்ள மாவில் நனைத்து எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA