பட்டர் நான்

Spread The Taste
Makes
15 நான்கள்
Preparation Time: 3 நிமிடங்கள்
Cooking Time: 1 நானுக்கு 5 நிமிடங்கள்
Hits   : 7031
Likes :

Preparation Method

 • மைதாமாவுடன் உப்புத்தூள், பேக்கிங் பவுடர், சமையல் சோடா இவற்றை சேர்த்து 3 முறை சலித்துக் கொள்ளவும்.
 • ஈஸ்ட்டை வெதுவெதுப்பான பாலில் கலந்து 10 நிமிடங்கள் வைக்கவும்.
 • சலித்து வைத்துள்ள மைதாமாவு கலவையை அகன்ற பாத்திரத்தில் போட்டு நடுவில் ஒரு பள்ளம் செய்து கொள்ளவும்.
 • ஈஸ்ட்டில் கரைத்த பால் மற்றும் சர்க்கரையை அந்தப் பள்ளத்தில் ஊற்றவும்.
 • 1 நிமிடம் கழித்து, நெய் சேர்த்து மாவை நன்றாக கலக்கவும். கலக்கும் போது தேவைப்பட்டால் சிறிதளவு சுடுதண்ணீர் தெளித்து, சற்று இளக்கமான மாவாகப் பிசைந்து கொள்ளவும்.
 • பிசைந்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதன் மீது ஈரத்துணி போட்டு, பாத்திரத்தை மூடி வைக்கவும்.
 • 6 மணி நேரம் கழித்து மாவில் பெரிய உருண்டைகள் செய்து வைக்கவும்.
 • உருண்டைணை பூரிப்பலகை மீது வைத்து, பூரிக்கட்டையால் சற்று பருமனான வட்டமாகத் தேய்த்து வைத்துக் கொள்ளவும்.
 • வட்டத்தின் ஒரு பகுதியைப் பிடித்து இழுத்து நீள்வட்டமான வடிவமாக்கிக் கொள்ளவும்.
 • தோசைக்கல் அல்லது Non—Stick—Pan—ஐ காய வைத்துக் கொள்ளவும்.
 • தேய்த்து வைத்துள்ள நீள்வட்டமான மாவின் மீது தண்ணீர் தடவிக் கொள்ளவும்.
 • தண்ணீர் தடவிய பகுதி கீழ்ப்பக்கம் இருக்கும்படி போடவும்.
 • மிதமான தீயில் வைத்து மூடி வைக்கவும்.
 • அதன்பின் Non—Stick—Pan—ன் கைபிடியைப் பிடித்து மாவோடு அனலில் காட்டவும்.
 • நன்றக வெந்ததும், எடுத்து வைக்கவும்.
 • இதுபோல எல்லா மாவிலும் 'நான்' தயாரித்து வெண்ணெய் தடவி பரிமாறவும்.
Engineered By ZITIMA