Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 1 சப்பாத்திக்கு 4 நிமிடங்கள்
Hits : 3449 Likes :
Ingredients
கோதுமை மாவு ஒன்றரை கப்
மைதாமாவு அரை கப்
பனீர் 300 கிராம்
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 4
ஓமம் 3 சிட்டிகை
கொத்தமல்லி இலை 1 மேஜைக்கரண்டி
கரம்மஸாலாத்தூள் 3 சிட்டிகை
வெண்ணெய் 2 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 100 மில்லி லிட்டர்
Preparation Method
செய்முறை:
கோதுமை மாவையும், மைதா மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்புத்தூள் வெண்ணெய் இவற்றைப் போட்டு கலந்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மென்மையான மாவாக பிசைந்து மூடி வைக்கவும்.
பனீர் மஸாலா தயாரிப்பதற்கு:
பனீரை துறுவிக் கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பனீர் துறுவலுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, ஓமம், உப்புத்தூள், கரம்மஸாலாத்தூள் இவற்றை நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
பிசைந்து வைத்துள்ள மாவில் இருந்து சிறிதளவு எடுத்து பூரிப்பலகையின் மீது வைத்து வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.
நடுவில் பனீர் கலவையை வைத்து இதன் மீது இன்னொரு வட்டத்தை வைத்து ஓரங்களை ஒட்டிக் கொள்ளவும்.
இதுபோல எல்லா மாவிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை காய வைத்து, செய்து வைத்துள்ள பனீர் நிரப்பப்பட்ட வட்டத்தை போட்டு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து வைக்கவும்.
இதுபோல எல்லா மாவிலும் பனீர் நிரப்பப்பட்ட சப்பாத்திகள் தயாரித்து பரிமாறவும்.