காலிஃப்ளவர் சப்பாத்தி

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 4833
Likes :

Preparation Method

 • கோதுமை மாவு, மைதாமாவு இவற்றுடன் 1 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய், உப்புத்தூள் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து மூடி வைத்துக் கொள்ளவும்.
 • காலிஃப்ளவரை துறுவலாக்கிக் கொள்ளவும்.
 • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • வாணலியில் வெண்ணெய் போட்டு லேஸாக உருகியதும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
 • வெங்காயம் வதங்கியபின் சீரகத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் காலிஃப்ளவர் துறுவல் மற்றும் உப்பு சேர்க்கவும்.
 • அதன்பின் கொத்தமல்லி இலை சேர்த்து மஸாலா கெட்டியானதும் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
 • சப்பாத்திக்காக பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிதளவு எடுத்து உருண்டையாக செய்து, பூரிப்பலகை மீது வைத்து, வட்டமாக தேய்க்கவும்.
 • தயாரித்து வைத்துள்ள காலிஃப்ளவர் மஸாலாவில் சிறிதளவு வைத்து, சப்பாத்தியின் ஓரத்திற்கு மிகக் கொஞ்சம் முன்பு இடைவெளி விட்டு பரப்பவும்.
 • இதன் மீது இன்னொரு வட்டம் தேய்த்து, மூடி ஓரங்களில் சிறிதளவு தண்ணீர் தடவி பொருத்திக் கொள்ளவும்.
 • தோசைக்கல்லை காய வைத்து, மஸாலா வைத்து செய்த சப்பாத்தியை மாவில் புரட்டி எடுத்து கவனத்துடன் மெதுவாக போட்டு, சுற்றிலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
 • ஒரு பக்கம் வெந்ததும், மறுபக்கம் மெதுவாக திருப்பிப் போட்டு மேலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
 • இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.
 • இதுபோல் எல்லா மாவிலும் சப்பாத்திகள் தேய்த்து காலிஃப்ளவர் சப்பாத்தி தயாரித்து பரிமாறவும்.

 

Engineered By ZITIMA