காஷ்மீரி நான்

Spread The Taste
Serves
2 நபர்களுக்கு
Preparation Time: 2 மணி 10 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 2934
Likes :

Preparation Method

  • பாத்திரத்தில் மைதாமாவு, ஈஸ்ட், ½ தேக்கரண்டி சர்க்கரை, உப்பு, பேக்கிங் பவுடர், சமையல் சோடா இவற்றைக் கலந்து, இதன் நடுவே லேஸாக பள்ளம் செய்து, தயிர், பால், வெண்ணெய் போட்டு, நன்றாகக் கலந்து, 5 நிமிடங்கள் வரை மாவை மிருதுவாக பிசைந்து, 2 மணி நேரம் தனியே வைக்கவும். இதனால் மாவு இரட்டிப்பாகும்.
  • பாதாம் பருப்பை வெது வெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து தோல் நீக்கியபின் முந்திரிப்பருப்பு, சர்க்கரை, இவற்றுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • பிசைந்து வைத்துள்ள மாவை 4 பாகங்களாக பிரித்துக் கொள்ளவும்.
  • பூரிப்பலகையில் சிறிதளவு மைதாமாவை தூவி இதன் மீது ஒரு பாகத்தை வைத்து விரல்களால் சிறிய வட்டமாக தட்டிக் கொள்ளவும்.
  • 2 மேஜைக்கரண்டி அரைத்து வைத்துள்ள பாதாம் பருப்பு கலவையை வட்டத்தின் நடுவே வைத்து மூடிக் கொள்ளவும்.
  • இதுபோல் எல்லா மாவிலும் தயார் செய்து கொள்ளவும்.
  • பூரிப்பலகையில் மைதாமாவு தூவி, மூடிய நானை வைத்து லேஸாக பூரிக்கட்டையினால் தேய்க்கவும். மறுபக்கமும் திருப்பிப் போட்டு தேய்த்துக் கொள்ளவும்.
  • Non—Stick Pan—ஐ காய வைத்து, நானைப் போட்டு மிதமான தீயில் மூடி வைத்து அங்கங்கே ப்ரவுன் கலராகத் தோன்றியதும் எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA