மஸாலா சப்பாத்தி

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 25 நிமிடங்கள்
Cooking Time: 1 சப்பாத்திக்கு 4 நிமிடங்கள்
Hits   : 6993
Likes :

Preparation Method

சப்பாத்தி தயாரிப்பதற்கு செய்முறை:

 • பாத்திரத்தில் மாவைப் போட்டு அதில் கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மென்மையான மாவாக பிசைந்து, நெய் சேர்த்து மறுபடியும் மென்மையாக பிசைந்து மூடி வைக்கவும்.

மஸாலா தயாரிப்பதற்கு செய்முறை:

 • உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும்.
 • இஞ்சி, பூண்டு, சோம்பு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
 • வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி—பூண்டு—சோம்பு, அரைத்தது, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
 • வதங்கியதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
 • அதன்பின் உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், கரம்மஸாலாத்தூள், உப்பு போட்டு, கிளறி வதங்கியதும் கொத்தமல்லி இலை போட்டு கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.

மஸாலா சப்பாத்தி செய்முறை:

 • மாவில் சிறிதளவு எடுத்து, பூரிப்பலகை மீது வைத்து, கனமான வட்டமாகத் தேய்க்கவும்.
 • இதன் நடுவில் சிறிதளவு உருளைக்கிழங்கு மஸாலா வைத்துக் கொள்ளவும்.
 • இன்னொரு வட்டம் தேய்த்து மஸாலா வைத்துள்ள சப்பாத்தி மீது வைத்து, மூடி ஓரங்களில் சிறிதளவு தண்ணீர் தடவி, ஒட்டிக் கொள்ளவும்.
 • அதன்பின் சிறிதளவு மாவில் புரட்டி, எடுத்து, மறுபடியும் தேய்த்து வைத்துக் கொள்ளவும். இதுபோல எல்லா மாவிலும் செய்து வைத்து கொள்ளவும்.
 • தோசைக்கல்லை காய வைத்து, மஸாலா நிரப்பப்பட்ட சப்பாத்தியைப் போட்டு சுற்றிலும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றிவும்.
 • இரண்டு பக்கமும் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, சப்பாத்தி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA