சில்லி பனீர்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 6502
Likes :

Preparation Method

  • பனீர் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
  • பூண்டை ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவில் கீறிக் கொள்ளவும்.
  • சோள மாவை சிறிதளவு உப்புத்தூள், தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பனீர் துண்டுகளை சோள மாவில் நனைத்து, எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து தனியே வைக்கவும்.
  • வேறு வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தட்டி வைத்துள்ள பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் ஸோயா ஸாஸ், மிளகுத்தூள், தக்காளி ஸாஸ், சில்லி ஸாஸ் தேவைப்பட்டால் உப்புத்தூள் இவற்றைப் போட்டு கிளறியபின் பொரித்து வைத்துள்ள பனீர் துண்டுகள், கொத்தமல்லி இலை இவற்றை சேர்த்து நன்றாக கிளறிபின், இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA