பனீர் கோஃப்தா குழம்பு

Spread The Taste
Serves
5 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 30 நிமிடங்கள்
Hits   : 3647
Likes :

Preparation Method

  • பனீரை கையால் மென்மையாக, பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
  • தக்காளியை சுடு தண்ணீரில் 5 நிமிடங்கள் போட்டு வைத்து, அதன்பின் தோலை நீக்கி, அரைத்துக் கொள்ளவும்.
  • கேரட், பீன்ஸ் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பட்டாணி, கேரட், பீன்ஸ் இவற்றை ஆவியில் (Steam) வேக வைத்துக் கொள்ளவும்.  வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கோவாவுடன், உப்புத்தூள், மிளகாய்த்தூள் ஆவியில் வேக வைத்துள்ள காய்கறிகள் இவற்றை சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
  • பனீரை சிறிய உருண்டைகளாக செய்து கொள்ளவும்.
  • ஒரு உருண்டையை கிண்ணம் போல செய்து இதனுள் கோவா—காய்கறி கலவையை வைத்து மூடிக் கொள்ளவும்.
  • இது போல எல்லாவற்றையும் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பனீர் உருண்டைகளைப் போட்டு பொரித்து, எடுத்து தனியே வைக்கவும்.
  • வேறு வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கி, வெங்காயம் போட்டு, சிவக்க வதக்கவும்.
  • அதன்பின் அரைத்து வைத்துள்ள தக்காளி, ஜாதிக்காய் பொடி, கரம் மஸாலாத்தூள், தயிர் இவற்றை சேர்த்து நன்றாக கலந்து வதக்கிக் கொள்ளவும்.
  • கெட்டியானதும், செய்து வைத்துள்ள பனீர் கோஃப்தாக்களைப் போட்டு, மெதுவாகக் கிளறி, உடனே இறக்கி வைக்கவும்.
  • கொத்தமல்லி இலை தூவிய பின் பரிமாறவும்.
Engineered By ZITIMA