பனீர் பட்டர் மஸாலா

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 8479
Likes :

Preparation Method

  • பனீரை சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • 2 பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • முந்திரிப்பருப்பை அரைத்துக் கொள்ளவும்.
  • சீரகத்தை வறுத்து, தூளாக்கிக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • குடமிளகாயின் விதைகளை நீக்கி விட்டு முக்கோண வடிவத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மீதமுள்ள வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 மேஜைக்கரண்டி வெண்ணெயை போட்டு உருகியதும் அரைத்து வைத்துள்ள வெங்காயக் கலவையைப் போட்டு வதக்கவும்.
  • மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
  • பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, முந்திரிப்பருப்பு அரைத்ததைப் போட்டுக் கிளறவும்.
  • 3 நிமிடங்கள் கொதித்ததும் தக்காளி அரைத்தது, சீரகத்தூள், கரம்மஸாலாத்தூள், சிகப்பு கலர் பொடி, உப்பு இவற்றைப் போட்டு 5 நிமிடங்கள் ஆனதும் 1 கப் தண்ணீர் ஊற்றி, மேலும் 3 நிமிடங்கள் கொதித்ததும் கசூரி மேத்தி சேர்த்து, கிளறி இறக்கி வைக்கவும்.
  • வேறு வாணலியில் மீதமுற்ற வெண்ணெய் போட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், குடமிளகாய்  துண்டுகள் போட்டு நன்றாக வதக்கி, இறக்கி வைத்துள்ள மஸாலாவுடன் போட்டுக் கிளறவும்.
  • மறுபடியும் சூடேற்றி, பனீர் துண்டுகளைப் போட்டு 2 நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA