Preparation Time: 15 நிமிடங்கள் Cooking Time: 15 நிமிடங்கள்
Hits : 7638 Likes :
Ingredients
பனீர் 400 கிராம்
தக்காளி 6
பெரிய வெங்காயம் 3
இஞ்சி—பூண்டு அரைத்தது 2 தேக்கரண்டி
கரம்மஸாலாத்தூள் அரை தேக்கரண்டி
தனியாத்தூள் 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு 10
ஃப்ரெஷ் க்ரீம் (Fresh Cream) 3 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி இலை 3 மேஜைக்கரண்டி
சோம்பு அரை தேக்கரண்டி
வெண்ணெய் (Cooking Butter) 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 2 தேக்கரண்ட
Preparation Method
பனீர் துண்டுகள் தயாராக வைத்துக் கொள்ளவும்.
தக்காளியை சுடு தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு வைத்து, ஆறியபின், தோலை நீக்கிவிட்டு அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கி, இறக்கி ஆறியதும் அரைத்துக் கொள்ளவும்.
முந்திரிப்பருப்பை ஊற வைத்து, அரைத்துக் கொள்ளவும்.
அகன்ற வாணலியில் வெண்ணெய் போட்டு, உருகியதும் சோம்பு போட்டு தாளித்து, இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
அதன்பின் தனியாத்தூள், மிளகாய்த்தூள், அரைத்த தக்காளி, வெங்காயம் அரைத்தது இவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும் உப்பு சேர்க்கவும்.
மஸாலா ஓரளவு கெட்டியானதும் பனீர் துண்டுகளைப் போட்டு, கிளறவும்.
மிதமான தீயில் வைத்து, 3 நிமிடங்கள் ஆன பின் கரம்மஸாலாத்தூள், ஃப்ரெஷ் க்ரீம், அரைத்த முந்திரிப்பருப்பு, கொத்தமல்லி இலை இவற்றைப் போட்டு நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.