பனீர் கட்லெட்

Spread The Taste
Serves
Preparation Time:
Cooking Time:
Hits   : 9332
Likes :

Preparation Method

  • பனீரை துறுவலாக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை துறுவிக் கொள்ளவும்.
  • பட்டை, சோம்பு, கிராம்பு இவற்றை நைஸான தூளாக்கிக் கொள்ளவும்.
  • மைதாமாவில் சிறிதளவு தண்ணீர், உப்புத்தூள் சேர்த்து சற்று கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயத் துறுவல் போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின், பனீர் துறுவல், தூளாக்கிய பொருட்கள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு, கொத்தமல்லி இலை இவற்றைப் போட்டு நன்றாக கிளறி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • அதன்பின் பனீர் கலவையில் உருண்டைகள் செய்து, உருண்டைகளை லேஸாக தட்டி கட்லெட் வடிவங்களாக செய்து வைத்துக் கொள்ளவும்.
  • மைதா கலவையில் பனீர் கட்லெட் வடிவங்களை நனைத்து, அதன்பின் ரஸ்க்தூளில் புரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் செய்து வைத்துள்ள கட்லெட்களை ஒரு முறைக்கு 4 அல்லது 5 வீதம் போட்டு, பொன்நிறமாகப் பொரித்து எடுக்கவும்.
  • இதுபோல எல்லா கட்லெட்களையும் பொரித்து எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA