பனீர் ஜால்ஃப்ரிஸ்

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 9276
Likes :

Preparation Method

 • பனீர் துண்டுகளை வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு வைக்கவும்.
 • 3 தக்காளியை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
 • 1 தக்காளியின் விதைகளை நீக்கிவிட்டு, மெல்லிய நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
 • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டுத் தாளிக்கவும்.
 • வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
 • அதன்பின் இஞ்சி— பூண்டு அரைத்தது போட்டு வதக்கி, தக்காளி அரைத்தது போட்டு வதக்கவும்.
 • குடமிளகாய் துண்டுகள் போட்டு வதக்கவும்.
 • குடமிளகாய் அதிகமாக வதங்கும் முன், கரம்மஸாலாத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டுக் கிளறவும்.
 • பனீர், கசூரிமேத்தி போட்டுக் கிளறி நன்றாக வதங்கியதும், கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.
 • பரிமாறும்போது விதைகள் நீக்கிய தக்காளி துண்டுகளை அடுக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA