கேரட் சாதம்

Spread The Taste
Serves
3 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 6281
Likes :

Preparation Method

  • பாஸ்மதி அரிசி, சீரக சம்பா அரிசி, பச்சரிசி இவற்றில் ஏதாவது அரிசியில் தயாரிக்கலாம்.
  • தேங்காயை துறுவி பால் எடுத்து அதில் அரிசியைப் போட்டு உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீர் சேர்த்து 2 டம்ளர் இருக்கலாம்.
  • சிறுபருப்பை குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.
  • இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை, சிகப்பு மிளகாய் போட்டு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய் அரைத்தது போட்டு வதக்கவும்.
  • வதக்கியபின் கேரட் துறுவல் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
  • அதன்பின் தக்காளிச்சாறு, பட்டாணி, சிறுபருப்பு, கொத்தமல்லி இலை இவற்றை சேர்த்து கிளறவும்.
  • கிளறியபின் வேக வைத்த சாதத்தைப் போட்டு மிதமான தீயில் வைத்து கிளறவும்.
  • முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து, சாதத்துடன் கலந்து கிளறி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA