தக்காளி சாதம்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 20 நிமிடங்கள்
Hits   : 10824
Likes :

Preparation Method

  • அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
  • தக்காளியை கையினால் கசக்கி, சாறை தனியாக வைத்து, வெளிப்பகுதியை அரைத்து சாறு எடுத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவி, பால் எடுத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவில் கீறிக் கொள்ளவும்.
  • முதலில் எடுத்த தக்காளி சாறு, அரைத்து எடுத்த தக்காளி சாறு, தேங்காய்ப்பால் அனைத்தும் சேர்ந்து 5 கப் இருக்க வேண்டும்.
  • கனமான பாத்திரத்தில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • அதன்பின் அரைத்து வைத்துள்ள தக்காளி சாறு, தேங்காய் பால் கலவையை ஊற்றி, கொத்தமல்லி இலை, உப்பு போட்டு கிளறவும்.
  • கொதித்ததும் அரிசியைப் போட்டு, நன்றாக கிளறி மூடி வைத்து, தீயை மிதமாக்கவும்.
  • சுமார் 10 நிமிடங்கள் கழித்து திறந்து நெய் ஊற்றி கிளறிவிடவும்.
  • மறுபடியும் மூடி வைக்கவும்.
  • அரிசி வெந்து, தயாரானதும் இறக்கி, 5 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.
Engineered By ZITIMA