மாங்காய் சாதம்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 10 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 3039
Likes :

Preparation Method

  • மாங்காயின் தோலை சீவியபின் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மாங்காய் துண்டுகளுடன் தேவையான உப்பு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும் அல்லது துறுவிக் கொள்ளவும்.
  • அரிசியை குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மிளகாயை கிள்ளி வைக்கவும்.
  • பெரிய அகன்ற வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், மிளகாய் போட்டுத் தாளித்து மாங்காய் அரைத்தது போட்டு மிதமான தீயில் வைத்து 3 நிமிடங்கள் கிளறியபின் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வேக வைத்துள்ள சாதத்தை மாங்காய் கலவையுடன் சேர்த்து மறுபடியும் சூடேற்றி மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் வரை கிளறி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA