அரிசி உப்புமா

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 35 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 9005
Likes :

Preparation Method

 

  • அரிசியையும், துவரம்பருப்பையும் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து, தண்ணீரை வடித்துவிட்டு கரகரப்பாக (குருணை போல) உடைத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயின் நடுவே கீறிக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
  • 2½ கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
  • தண்ணீர் கொதித்ததும் அரிசி, துவரம்பருப்பு உடைத்ததைப் போட்டு, விடாமல் கிளறவும்.
  • அரிசிக் கலவை வெந்ததும் தேங்காய்த்துறுவல் போட்டு, மூடி, மிதமான தீயில் 3 நிமிடங்கள் வைத்து, இறக்கி வைக்கவும்.
  • வேறு வாணலியில் நெய் ஊற்றி, காய்ந்ததும் மிளகு, சீரகம் போட்டு வறுத்து உப்புமாவுடன் போட்டுக் கிளறி, இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA