Preparation Time: 10 நிமிடங்கள் Cooking Time: 5 நிமிடங்கள்
Hits : 3518 Likes :
Ingredients
எலுமிச்சம்பழம் 2
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
சிகப்பு மிளகாய் 3
பெருங்காயத்தூள் அரை தேக்கரண்டி
தக்காளி 1
கொத்தமல்லி இலை 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி
Preparation Method
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
மிளகு, சீரகத்தை தூளாக்கிக் கொள்ளவும்.
மிளகாயைக் கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
தண்ணீருடன் தக்காளியை கையால் கசக்கிப் பிழிந்து விடவும்.
தூளாக்கிய பொருட்களைப் போடவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மிளகாய் கிள்ளியது போட்டு தாளித்து, பாத்திரத்தில் உள்ள ரஸ தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்க்கவும்.
ரஸம் கொதித்து 2 நிமிடங்கள் ஆனதும் எலுமிச்சைச்சாறு ஊற்றி, கொத்தமல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.
எலுமிச்சம் பழத்தின் தன்மையைப் பொறுத்து சாறு இருக்கும். எனவே புளிப்பு சரி பார்த்து எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.