Preparation Time: 1 மணி 40 நிமிடங்கள் Cooking Time: 40 நிமிடங்கள்
Hits : 8039 Likes :
Ingredients
பச்சரிசி 200 கிராம்
புழுங்கல் அரிசி 200 கிராம்
உளுந்து 4 மேஜைக்கரண்டி
வெந்தயம் 2 தேக்கரண்டி
தயிர் அல்லது மோர் 1 மேஜைக்கரண்டி
சமையல் சோடா 1 தேக்கரண்டி
தேங்காய் 1
உப்புத்தூள் தேவையான அளவு
Preparation Method
பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் இவற்றை ஊற வைத்து, ஆட்டிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, 5 மேஜைக்கரண்டி அரிசிமாவு போட்டுக் கலந்து சூடேற்றவும். அரிசிமாவு வெந்து சற்று கெட்டியானதும் இறக்கி வைக்கவும். ஆறியதும் ஆட்டிய மாவுடன் கலந்து கொள்ளவும்.
ஆட்டிய மாவுடன் தயிர், உப்புத்தூள் போட்டுக் கலந்து மூடி வைக்கவும்.
மறுநாள் காலையில், தேங்காயைத் துறுவி, பால் எடுத்துக் கொள்ளவும்.
ஆப்ப மாவில் சமையல் சோடா, சிறிதளவு தேங்காய்ப்பால், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஆப்ப சட்டியைக் காய வைத்து, மாவில் சிறிதளவு ஊற்றி, சுழற்றி விடவும். மூடி வைக்கவும்.