Preparation Time: 45 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 6171 Likes :
Ingredients
கடலைப்பருப்பு 200 கிராம்
உளுத்தம்பருப்பு 2 மேஜைக்கரண்டி + 1 தேக்கரண்டி
துவரம்பருப்பு 200 கிராம்
சிறுபருப்பு 2 மேஜைக்கரண்டி
பீன்ஸ் 150 கிராம்
சிகப்பு மிளகாய் 8
பச்சை மிளகாய் 2
பெருங்காயத்தூள் கால் தேக்கரண்டி
கடுகு அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 5 மேஜைக்கரண்டி
Preparation Method
பருப்பு வகைகளை 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஊறியதும் 6 சிகப்பு மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
ஸ்டீமரின் அளவிற்கு வாழை இலையை நறுக்கி, பருப்பு கலவையை இலையில் பரப்பி ஸ்டீமரில் (Steamer), வைத்து 15 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளவும். (இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்துக் கொள்ளலாம்.)
வெந்த பருப்பு ஆறியதும் கலவையை பெரிய தட்டில் பரப்பி, கையினால் உதிர்த்துக் கொள்ளவும்.
பீன்ஸை நறுக்கிக் வேக வைத்துக் கொள்ளவும்.
மீதமுள்ள சிகப்பு மிளகாயை கிள்ளி வைக்கவும்.
பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
அகலமான வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சிகப்பு மிளகாய், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
அதன்பின் வேக வைத்துள்ள பீன்ஸ் மற்றும் உதிர்த்து வைத்துள்ள பருப்பு கலவையைப் போட்டு 3 நிமிடங்கள் கிளறி, அதன்பின் தீயை மிதமாக்கி 5 நிமிடங்கள் கிளறி, உப்பு சரி பார்த்தபின் இறக்கி, பரிமாறவும்.