Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 20 நிமிடங்கள்
Hits : 5664 Likes :
Ingredients
வாழைக்காய் 2
கடலைமாவு 3 மேஜைக்கரண்டி
பொரிகடலைத்தூள் 2 மேஜைக்கரண்டி
பெரிய வெங்காயம் 1
மிளகாய்த்தூள் அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் 3 சிட்டிகை
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 300 மில்லி லிட்டர்
Preparation Method
வாழைக்காயை வேக வைத்து தோல் நீக்கி, உப்பு சேர்த்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
பிசைந்து வைத்த வாழைக்காயுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கடலைமாவு, பொரிகடலைத்தூள், பெருங்காயத்தூள், வெங்காயம் இவற்றைப் போட்டு மறுபடியும் பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
அதன்பின் கையில் லேஸாக எண்ணெய் தடவிக் கொண்டு, வாழைக்காய் கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடை வடிவமாக தட்டி, எண்ணெய்யில் போட்டு, பொரித்து எடுத்து பரிமாறவும்.