முட்டை குருமா

Spread The Taste
Serves
6 நபர்களுக்கு
Preparation Time: 20 நிமிடங்கள்
Cooking Time: 15 நிமிடங்கள்
Hits   : 8362
Likes :

Preparation Method

  • முட்டையை வேக வைத்து, ஓடு நீக்கி, அங்கங்கே கீறல்கள் போட்டுக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், வெங்காயம், பூண்டு, சோம்பு, மஞ்சள்தூள் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயை துறுவி பால் எடுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சீரகம் போட்டு தாளித்து அரைத்த மஸாலா போட்டு வதக்கவும்.
  • மஸாலா நன்றாக வதங்கியதும் தேங்காய்ப்பால் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறவும்.
  • குருமா, கெட்டியானதும் முட்டைகளை போட்டு, கிளறி இறக்கி பரிமாறவும்.
Engineered By ZITIMA