மஸாலா ஆம்லெட்

Spread The Taste
Serves
4 நபர்களுக்கு
Preparation Time: 15 நிமிடங்கள்
Cooking Time: 10 நிமிடங்கள்
Hits   : 18043
Likes :

Preparation Method

  • முட்டையை உடைத்து ஊற்றி, உப்புத்தூள், மிளகாய்த்தூள், கரம்மஸாலாத்தூள், போட்டு நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் 2 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டுத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொத்தமல்லி இலை போட்டு வதக்கவும்.
  • நன்றாக வதங்கியதும் இறக்கி, முட்டைக் கலவையுடன் சேர்த்துக் கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  • தோசைக்கல்லைக் காய வைத்து காய்ந்ததும் முட்டைக் கலவையில் சிறிதளவு எடுத்து, பரவலாக ஊற்றி, சுற்றிலும் சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  • திருப்பிப் போட்டு, வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
Engineered By ZITIMA