Preparation Time: 20 நிமிடங்கள் Cooking Time: 15 நிமிடங்கள்
Hits : 9509 Likes :
Ingredients
முட்டை 3
கோழிக்கறி (எலும்பு இல்லாதது) 300 கிராம்
பெரிய வெங்காயம் 2
பச்சை மிளகாய் 2
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் அரை தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
இதயம் நல்லெண்ணெய் 4 மேஜைக்கரண்டி
Preparation Method
ஒரு பாத்திரத்தில் (Bowl) முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
உப்பு, மிளகாய்த்தூள் கலந்து நன்றாக அடித்து, தனியே வைக்கவும்.
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கோழிக்கறியை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, வேக வைத்து, மிகவும் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
வாணலியில் 1 மேஜைக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கி அதன்பின் கோழிக்கறியைப் போட்டு லேஸாக வதக்கி, இறக்கி வைத்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை காய வைத்து, சிறிதளவு இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கோழிக்கறி கலவையிலிருந்து சிறிதளவு போட்டு, இதன் மீது முட்டையிலிருந்து சிறிதளவு பரவலாக ஊற்றவும்.
சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும்.
இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
மீதமுள்ள கோழிக்கறியிலும், முட்டையிலும் இது போல ஜம்போ ஆம்லெட்கள் தயாரிக்கலாம்.